ஆயிரம்தான் கவிசொன்னேன்
அழகழகாய்ப் பொய் சொன்னேன்
பெத்தவளே ஓம்பெருமை
ஒத்தைவரி சொல்லலையே! View full article »
Latest Entries »
இந்த சிறுமி, விமானத்தில் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் வசிப்பவர் டாக்டர் சந்தோஷ் தாமஸ். இவரது ஆறு வயது மகள் அலிஷா. தாமஸ், சமீபத்தில் தனது மகளுடன் விமானத்தில் செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்ய சென்றார். View full article »
உலக இணையத்தள வரலாற்றில் முதன் முறையாக இணையத்தள முகவரிகளை தாய்மொழியில் பயன்படுத்தும் சந்தர்ப்பம் இலங்கைக்கு கிட்டியுள்ளது.இந்த வாய்ப்பினைப் பெறுவதற்கு ‘அய்கன்” (ICANN) நிறுவனம் அனுமதி வழங்கியுள்ளது .
இணையத்தள முகவரியை சிங்களத்தில் ‘லங்கா’ என்றும் தமிழில் ‘இலங்கை’ என்றும் நாம் பதிந்து கொள்ள இதன் மூலம் எமக்கு வாய்ப்பேற்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி இதற்கான அனுமதியை ‘அய்கன்” (ICANN) வழங்கியதை அடுத்து இத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வைபவம் நேற்று 28 ஆம் திகதி கல்கிசை ஹோட்டலில் இடம்பெற்றது. View full article »
இனந் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்ட பிச்சசைக்கார் கல்கிசை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் இன்று மீட்கப்பட்டுள்ளார்.
மேற்படி நபர் குறித்த பிரதேசத்தில் அதிர்ஷ்ட சீட்டு விற்பனையில் ஈடுப்பட்டதாகவும், இவரிடம் இருந்த பணத்தை கொள்ளையிடுவதற்கே இனந்தெரியாத நபர்கள் கல்லால் தாக்கி கொலை செய்திருக்கலாம் என கல்கிசை பொலிஸார் தெரிவித்துள்ளனர். View full article »
ஆளும் கடசி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் சபையில் ஏற்பட்ட குழப்ப நிலைமையை அடுத்து வரவு-செலவுத் திட்டம் மீதான விவாதம் நாளை வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டது.
சபாநாயகர் சமல் ராஜபக்ஸ இத்தீர்மானத்தை அறிவித்தார். பதில் நிதி அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம வரவு-செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் இன்று முன்வைத்தார். View full article »
இதுவும் சிகரெட் குடிக்குமா? எனும் போது உங்கள் மனதில் எதுவும் என கேள்வி எழுபம்பும். பொறுங்கள் விடயத்துக்கு வருகிறேன்,
இன்றைய விநோத உலகை மிகவும் ஆச்சரியத்துக்கு உட்படுத்தி இருப்பவை இந்த இரண்டு காக்கைகள். இவை மலேசியாவைச் சேர்ந்தவை. மனிதர்களுக்கு மட்டும் அல்ல காக்கைகளுக்கும் சிகரெட்டில் கொள்ளை ஆசை என்பதை இவை சொல்லாமல் சொல்கின்றனவா? View full article »
மனைவி முத்துலட்சுமியையும், கண்மணிகளான நான்கு குழந்தைகளையும் கையறு நிலையில் விட்டுவிட்டு, நாற்பது வயதான இராமு கடலில் உயிர்நீத்தார்.இராமுவின் உயிரைக் குடித்த இலங்கைக் கடற்படையின் துப்பாக்கி ரவைகள், கடந்த இருபது ஆண்டுகளில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தமிழக மீனவர்களின் உயிர்களையும் குடித்து வந்துள. அந்த நீண்ட பட்டியலில் இராமுவின் பெயர் இறுதியானதல்ல. இன்னமும் சில ஆயிரம் தமிழக மீனவர்களைப் பறவைகளைச் சுடுவது போல் கடற்பரப்பில் வைத்துச் சுட்டுக் கொல்ல இலங்கைக் கடற்படை அணிவகுத்துக் கொண்டிருக்கிறது.இராமுவுக்குக் கடலைத் தெரியும், மீன் வகைகளைத் தெரியும், படகுகளை ஓட்டத் தெரியும், நீச்சல் தெரியும், வலைகளின் கண் அளவுகள் தெரியும், மிதப்புக் கட்டைகளை வலைகளில் பொருத்தத் தெரியும்; எந்தக் காலத்தில், எந்த இடத்தில், எந்த ஆழத்தில் எந்தவித வலையை எந்தக் கண்ணளவில் பயன்படுத்தினால் எவ்வெவ்வகை மீன்களைப் பிடிக்கலாம் என்ற பட்டறிவும், தொழில் நுட்பமும் நன்றாகவே தெரியும்.பகலிலோ, இரவிலோ கடற்பரப்பில் திசையை இராமு அறிவார். View full article »
உலகத்தை அச்சுறுத்தும் பன்றிக்காய்ச்சல் நோய் இன்னும் ஓய்ந்த பாடில்லை. தொடர்ந்து வேகமாக பரவி வருகிறது. இந்நோய் தாக்கி உலகம் முழுவதும் 5712 பேர் பலியாகி உள்ளனர். எனவே இதை பேரழிவு நோய் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந் நோய்க்கு கடந்த வாரத்தில் மட்டும் உலகம் முழுவதும் 700 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனவே பலியானவர்களின் எண்ணிக்கை 5712 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் 4175 பேர் இறந்துள்ளனர். 4 லட்சத்து 41 ஆயிரத்து 661 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் பலர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
காலம் காலமாக இலங்கை தமிழர் புலம் பெயந்தவர்கள் எனப் பட்டியல் போட்டு;ம் ,சாயம் பூசப்பட்டும் வாழ்ந்து வருகின்றமை நேற்று இன்று தற்செயலாக இடம் பெற்ற ஒரு சம்பவம் அல்ல. கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக சிலரது; ஆதிக்கங்களின் பிடியில் அல்லல்ப்படும் இலங்கை தமிழர்களின் ஏகோபித்த கோரிக்கை “இலங்கையை தவிர எங்களை வேறு எங்காவது எங்களை
வாழ விடுங்கள”; என்பதுவே. வாழ்வாதாரம் இழந்து வசதி இழந்து தங்குவதற்கு இடம் இன்றி அகதிகளாக தெரியும் எம்மவர்கள் சொந்த நாட்டிலேயே வாழும் உரிமையை இழந்து அவுஸ்திரேலியா இந்தியா கனடா போன்ற நாடுகளில் வாழும் உரிமையை கேட்டு செல்லும் நிலை எம்வர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு இந் நிலைமை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் பயங்கரவாதம் யுத்தம் எனும் போர்வைக்குள் கொன்று குவிக்கப்பட்ட எம்வர்கள் இன்று பயங்கரவாதத்தை வெற்றி கொண்டு சமாதானம் எனும் வெற்றி கொடியின் கீழ் இலங்கை தமிழரை வாழவைக்கின்றனரா அல்லது சிதைக்கப்படுகின்றனரா அல்லது இன்னும் ஒரு பயற்கரவாதத்pற்கு அடிக்கல் நாட்டுகின்றனரா எது வென்று தீர்மானிப்பது முயற் கொம்பான விடயமாகவே காணப்படுகின்றது. வடக்கு மற்றும் வவுனியா மாவட்டங்களில் அகதி முகாம்கள் எனும் பெயரில் இரானவத்தினரின் அதிகார கட்டுபாட்டில் திறந்த வெளிச் சிறை கைதிகளாக திரியும் எம் மக்கள் நாளை விடியலுக்காய் ஆடை தைக்கும் அல்லோலகலமான முயற்சி எனலாம். View full article »
அநுராதபுரம் மாவட்டத்தில் கெக்கிராவ பிரதேச செயலகப் பிரிவில் நேற்று திங்கட்கிழமை மாலை வீசிய சூறாவளியால் பல வீடுகள் பலத்த சேதங்களுக்கு உள்ளானதாகப் பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மொரகொல்லாவ, ஹோராப்பொல பகுதிகளிலேயே இந்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதுவரை 40 வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சேத விபரங்களைக் கண்டறிய கிராம அதிகாரிகள், மற்றும் சமூக சேவைகள் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனப் பிரதேச செயலாளர் தெரிவித்தார். View full article »

![large_28219[1]](http://luci13.files.wordpress.com/2010/06/large_282191.jpg?w=300&h=250)

