இனந் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்ட பிச்சசைக்கார் கல்கிசை பொலிஸ் நிலையத்துக்கு அருகில் இன்று மீட்கப்பட்டுள்ளார்.

மேற்படி நபர் குறித்த பிரதேசத்தில் அதிர்ஷ்ட சீட்டு விற்பனையில் ஈடுப்பட்டதாகவும், இவரிடம் இருந்த பணத்தை கொள்ளையிடுவதற்கே இனந்தெரியாத நபர்கள் கல்லால் தாக்கி கொலை செய்திருக்கலாம் என கல்கிசை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கல்கிசை பொலிஸார் விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்தப் பகுதியில் கடந்த காலத்தில் ஐந்து பிச்சைக்காரர்கள் கொலை செய்யப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டமை குறிப்பிடதக்கது.